Connect with us

Cinema News

விஷாலுக்கும் சரத்துக்கும் என்ன தான் பிரச்சனை.?! நடிகர் சங்க ‘பகீர்’ பின்னணி.!

நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்திற்கு பிறகு அதிக முறை நீண்டகாலம் பொறுப்பில் இருந்தவர் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் ராதாரவி இவர்கள்தான் நீண்டகாலமாக அந்த பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு, நடிகர் விஷால் அவரது தலைமையில் ஒரு குழுவை அமைத்து சரத்குமாரை பலமாக எதிர்த்து நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சாதாரண சங்கத் தேர்தல் அன்றைய தேதியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் பலம்வாய்ந்த சரத்குமார் ராதாரவி அவர்களை எதிர்த்து புதிய இளம் தலைமுறை நடிகரான விஷால் கார்த்தி போன்றோர் களம் கண்டனர்.ஏன் இந்த முடிவை இளம் நடிகர்கள் எடுத்தார்கள் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, சரத்குமார் ராதாரவி பொறுப்பில் இருந்தபோது நடிகர் சங்கம் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட சத்தியம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி கால்வாசி பணத்தை நடிகர் சங்கமும் முக்கால்வாசி பணத்தை சத்தியம் நிறுவனமும் முதலீடு செய்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பார்கள்.

இதையும் படியுங்களேன்…அஜித் சொன்ன ஒரு வார்த்தை.!? தகர்ந்தது விஷாலின் கனவு கோட்டை.!

அதற்கு மாதம் இரண்டு லட்சம் வாடகை பணத்தை சத்தியம் நிறுவனம் நடிகர் சங்கத்திற்கு கொடுத்துவிடும் இருபத்தி ஒன்பது வருடங்கள் அந்த கட்டிடம் சத்யம் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்குமாம்.

இந்த முடிவை எதிர்த்து தான் இளம் நடிகர்கள் நமக்கான கட்டிடத்தை நாமே கட்டிக் கொள்ளலாம் என முடிவெடுத்து நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டனர். அந்த வகையில், இறுதியில் தேர்தலில் வென்று விட்டனர் ஆனால் தற்போது வரை அந்த நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டியதோடு அப்படியே இருக்கிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top