சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இடையே காதல் கிசுகிசு வருவதும் அவர்கள் அதை மறுப்பதும், பின்னர் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பதுபோல அவர்களே திருமணம் செய்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில் தற்போது ஒரு இளம் நடிகை ஒருவர் ரகசியமாக காதல் திருமணம் செய்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் முகில் இயக்கத்தில் சாந்தனு மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான கண்டேன் படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ராஷ்மி கெளதம் தான். அதன் பின்னர் இவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், இதர மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
Also Read

அதன்படி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மி தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளாராம். இந்நிலையில் நடிகை ராஷ்மி கௌதம் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.
ஆனால், இதனை மறுத்த ராஷ்மி மற்றும் சுதீர் ஆகிய இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என கூறினார்கள். இந்நிலையில் நடிகை ராஷ்மி தொழிலதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை ராஷ்மி இந்த தகவலை மறுக்கவில்லை என்பது தான்.

அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமா வட்டாரமும் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மி அவரின் திருமண செய்தியை ஏன் மறைக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



