15 வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண் – 20 கிலோ சினைக்கட்டி அகற்றம்

Published On: December 18, 2019
---Advertisement---

40a9cbfe0ee621dc1211d6af62a4e740-1

பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 20 கிலோ எடைகொண்ட கட்டி ஒன்று மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த  ரதி என்ற பெண்ணுக்கு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வயிற்று வலி இருந்துள்ளது. இது சம்மந்தமாக பல மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். ஆனாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்தில் வலியோடு சேர்ந்து அவரது வயிறும் பெரிதாக ஆரம்பித்துள்ளது.

கடைசியாக எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் ரதி சென்று பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது அவர் வயிற்றில் சினைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து கடந்தவாரம் அவரது வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் ரதி நலமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அகற்றப்பட்ட கட்டி புற்றுநோய் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment