மீண்டும் தலையில் துண்டை போட்ட தியேட்டர் ஓனர்கள்.! தமிழக அரசால் நேர்ந்த கொடுமை.!

Published on: January 31, 2022
---Advertisement---

கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என ஒவ்வொருஅலையாக எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது தான் ஓரளவு அதன் தாக்கம் குறைந்து மீண்டும் மக்கள் பழையபடி தியேட்டருக்கு வர ஆரம்பித்தனர். அதன்படி, தியேட்டர்களும் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டு இனி அடுத்தடுத்து பெரிய படங்கள் திரைக்கு வந்துவிடும் நாமும் விட்டதை பிடித்து விடலாம் என்று சந்தோஷமாக இருந்தனர்.

தற்போது, அதற்கு எதிர்மாறாக தமிழக அரசு தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு தான், அட ஆமாங்க… உங்களுக்கு தெரியாதா?? வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்கள் தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் மக்கள் தியேட்டருக்கு வர விரும்ப மாட்டார்கள். அதனால், இப்போது படம் வெளியிட்டால் அதிக லாபம் கிடைக்காது என கூறி பின் வாங்கிவிட்டனர். அதனால், பிப்ரவரி 17 வரை எந்த புது படமும் திரைக்கு வராது மூன்றாவது அலையில் இருந்து மீண்டு பெரிய திரைப்படம் வரும் என காத்திருந்த தியேட்டர் ஓனர்கள் தற்போது சோகத்தில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்களேன்- இவ்வளவு தானா.?! 2 வாரத்தில் ஓடிவிடுகிறார்கள்.! வருத்தப்பட்ட நயன்தாரா காதலர்.!

அந்த வகையில், அனைத்து பெரிய படங்களும் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி, வலிமை, எதற்கும் துணிந்தவன், RRR  என அனைத்து படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment