அவர்கிட்ட கொடுக்காதீங்க சிம்புவை கெஞ்சும் ரசிகர்கள்..!

Published on: February 1, 2022
---Advertisement---

மாநாடு திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் சிம்புவும் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார். அவரது, அடுத்த திரைப்படங்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் அதிகரித்துள்ளது. அவர், அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’   திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.

simbu

இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான டிரைவிங் லைசென்ஸ் எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தில் பிருத்திவிராஜ், சுராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பர்.

இதையும் படியுங்களேன்-மீண்டும் காதல் மன்னனாக விஜய்.! பிப்ரவரி 14 காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.!

இதில், பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த இரண்டாவது கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா அல்லது ஜெய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம்.

எஸ் ஜே சூர்யா என்றால் சிறப்பாக நடித்து முடித்து விடுவார். ஆனால்,  ஜே  அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதை சரியாகக் கூற முடியவில்லை. இதனால், ஜெய் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருந்தாலும், சிம்பு தனது நண்பர் ஜெய் விட்டுக்கொடுக்க மாட்டார் என வட்டாரங்கள் குறிப்பிடுகிறது. ஒருவேளை அந்த படத்தில் ஜெய் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது. இப்படத்தை வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்க உள்ளாராம். விரைவில், இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment