சாரி விக்கி… ஆல்ரெடி கமிட்டட்… நயன் காதலருக்கு சமந்தாவின் பதில்

Published on: January 27, 2021
---Advertisement---

09226b52b96d6cf77ff81ed2842f88bb

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தக் கூட்டணி நானும் ரவுடிதான் படத்துக்குப் பின் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறது. படத்துக்கான நைட் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின்னர் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கியது. 

இந்தநிலையில், ரசிகர்களில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகை சமந்தா இன்ஸ்டாவில் பதிலளித்தார். `Ask me Anything’ என்ற பெயரில் நடந்த கேள்வி – பதில் செஷனில் தனது உடற்பயிற்சி, செல்லப் பிராணிகள் மீதான பாசம், குடும்பம், திரைப்படங்கள் மீதான காதல் என பல்வேறு விஷயங்களை சமந்தா பகிர்ந்துகொண்டார். 


காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று சமந்தா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “இந்தப் படம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று நான் நினைக்கிறேன். சாரி விக்கி.. அல்ரெடி கமிட்டட்’’ என வீடியோவில் சமந்தா பேசியிருக்கிறார். இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனும் நன்றி தெரிவித்திருக்கிறார். சமந்தாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 

Leave a Comment