ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவ விருது. மகிழ்ச்சியில் நடிகை!….

Published on: February 5, 2022
kajal_main
---Advertisement---

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், மும்பையில் பிறந்த இவர் இயக்குனர் பேரரசுவின் ‘பழநி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் காஜல்.

kajal1

இதன்பின் பொம்மலாட்டம், சரோஜா, மோதி விளையாடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த எந்தப்படமும் சரியாக ஓடடாததால், இவர் யாராலும் பரவலாக அறியப்படவில்லை. தெலுங்கில் இவர் நடித்த “மகதீரா” படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகர் கார்த்தி உடன் இவர் நடித்த “நான் மகான் அல்ல” படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் விஜய்யுடன், துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம் என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்ட காஜல், திருமணத்திற்குப் பின்னும் படங்களில் பிசியாக பல நடித்து வருகிறார்.

kajal3

சமீகாலமாக ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் பல திரை பிரபலங்களுக்கு “கோல்டன் விசா” வழங்கி கௌரவித்து வரும் நிலையில், தற்போது காஜல் அகர்வாலுக்கும் கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்து உள்ளது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment