மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய இலங்கை பவுலர் ! 17 வருட அக்தர் சாதனை தகர்ப்பு !

Published on: January 21, 2020
---Advertisement---

b64c72e467f136522566afeb95175ce7

உலக அளவில் அதிவேகமாக பந்துவீசிய பெருமையை பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தரிடம் இருந்து இலங்கைப் பந்துவீச்சாளர் மத்தீஷா பதிரானா பறித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி இப்போது நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 19 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மத்தீஷா பதிரானா என்ற 17 வயது பந்துவீச்சாளர், ஷோயப் அக்தர் கைவசமிருந்த 17 ஆண்டுக்கால சாதனை ஒன்றைத் தகர்த்துள்ளார். 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது அக்தர் வீசிய ஒரு பந்து 163.1 கி.மீ எனப் பதிவானது. இதுவே உலகளவில் பந்துவீச்சாளர் ஒருவர் வீசிய அதிகபட்ச வேகமாக இன்று வரை இருந்துள்ளது.

ஆனால் இந்தியா இலங்கை போட்டியில் பந்துவீசிய மத்தீஷா பதிரானா பந்து 175 கி.மீ எனப் பதிவாகியுள்ளது. ஏதாவது இயந்திரக் கோளாறு காரணமாக இப்படி தவறாக பதிவாகியிருக்கலாம் என நினைக்கையில் ஆனால் ஐசிசி இதுவரை அதுபற்றி எதுவும அறிவிக்கவில்லை. இதனால் சோயிப் அக்தர் சாதனையை 17 வயது மத்தீஷா முறியடித்துள்ளார் என இலங்கை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Comment