அவனுக்கு டைரக்ஷனே வரல…. பாதிலயே விட்டு சென்ற படக்குழு… கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இயக்குனர்…!

Published on: February 8, 2022
mano_main
---Advertisement---

திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய அனைவருமே நிச்சயம் நிராகரிப்புகள், அவமானங்கள் என அனைத்தையும் கடந்து தான் வந்திருப்பார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவரும் தான் சந்தித்த சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் வலம் வரும் நடிகர் மனோபாலா தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் சினிமாவிற்கு வந்ததற்கு விதிதான் காரணம். சினிமாவை நேசிக்கும் என்னை சினிமாவை நேசிக்கும் ஒருவர்தான் கூட்டி வந்தார். அவர் வேறு யாருமல்ல நடிகர் கமல்ஹாசன்தான்.

mano1

நான் இயக்குனரான பின்னர் ஒரு பெரிய தயாரிப்பாளருக்கு படம் இயக்கினேன். அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தயாரிப்பாளர். இங்கிருந்து நடிகர் நடிகைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு பொள்ளாச்சிக்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தோம். ஆனால் ஹீரோ ஹீரோயினுக்கு நடிப்பு வரவில்லை.

அதனால் இரவு முழுவதும் பயிற்சி கொடுத்ததால் அன்றைக்கு பாடல் காட்சிகளை எடுக்க முடியாமல் போனது. எனவே அங்கிருந்து பேக்-அப் செய்துகொண்டு ரூமிற்கு சென்று விட்டோம். காலையில் விடிந்தது பார்த்தால் என்னையும் கேமரா மேன் ஹரி என்பவரையும் தவிர வேறு யாருமே அங்கு இல்லை. மொத்த யூனிட்டும் கிளம்பி விட்டது.

mano2

எனக்கு டைரக்‌ஷன் தெரியலனு சொல்லி பொள்ளாச்சிலேயே விட்டுட்டு வந்துட்டாங்க. அந்த ரிசப்ஷன்ல 600 ரூபாய் பணம் கொடுத்திருந்தாங்க. அதை வச்சுதான் ஊருக்கு வந்தேன். அன்னைக்கு ஒரு அனாதை மாதிரி நின்னேன். இப்போ கூட அதை நினைச்சா கண்ணு கலங்குது” என தனது கடந்த கால கசப்பான அனுபவங்களை மனோபாலா பகிர்ந்துள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment