தயவு செய்து இதை செய்ஞ்சிட்டு போங்க.! இயக்குனர்களை கெஞ்சும் FIR ஹீரோ.!

Published on: February 8, 2022
---Advertisement---

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷ்ணு விஷால் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார். சமீபகாலமாக நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் சில ஆண்டுகளாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை.

vishnu_vishal

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்ஐஆர் படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. புது முக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் தமிழ்நாட்டின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதற்கிடையில், விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் பேசுகையில், அதாவது, என்னுடன் பயணிக்கும் புதுமுக இயக்குனர்கள் அனைவரும் ஹிட் கொடுத்த பிறகு அடுத்த பெரிய ஹீரோவை நோக்கி செல்கிறார்கள்.

இதையும் படியுங்களேன்- இவனுகல எங்களால கட்டுப்படுத்த முடியல.! தமிழ் தயாரிப்பாளர்கள் கதறல்.!

இதனால், பெரிய ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்து அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். ஆனால், நான் அப்படியே இருக்கிறேன். அவர்களிடம் நான் சொல்வது ஒன்று தான் ஹிட் கொடுத்தவுடன் மீண்டும் ஒரு படம் என்னுடன் சேர்ந்து பண்ணுங்கள் அப்போது தான் நானும் வளர முடியும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment