
நானும் உத்தமியா? இல்லையான்னு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு என ரசிகர் ஒருவரை பாடகி சின்மயி ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த இரண்டு நாட்களாக கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பிரச்சனை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்து சின்மயி ஒரு டுவிட்டை இன்று காலை பதிவு செய்திருந்தார்
இந்த ட்விட்டிற்கு அஜித் ரசிகர் ஒருவர், ‘நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் மாற்று கருத்து இல்லை ஆனால் தனிப்பட்ட நபரின் தவறுக்காக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒருத்தரை தாக்குவது தவறு. பெண்களை இழிவாக பேசுவது தவறு வன்மையாக கண்டிக்கிறோம், அனைவரும் உங்கள் குரலின் ரசிகை தான் ஆனால் நீங்கள் செய்வது அனைத்தும் சரி அல்ல என்று.. என பதிலளித்து இருந்தார்.
இந்த ரசிகருக்கு பதிலளித்த சின்மயி, ‘உங்களை மாதிரி ஆம்பள எல்லாம் நான் உத்தமியா? இல்லையான்னு சொல்ல தகுதி இருக்கான்னு யாருக்கு தெரியும். உங்களைப்போல அழுகிய வார்த்தைகள் யூஸ் பண்ற ஆட்கள் எல்லாம் என் குரலுக்கு ரசிகன் சொன்னால் எனக்குத்தான் அவமானம்’ என்று கூறியுள்ளார். சின்மயியின் இந்த பதிலால் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து தற்போது தங்கள் இலக்கை சின்மயி மீது திருப்பியுள்ளனர்.
Ungala maadiri aambala ellaam naan utthami ya illaya nnu solla thagudhiyachum irukkannu yevarukku teriyum. UngaLai pola azhugiya vaarthaigal use panra aatkal ellam en kuraluku rasigarnu sonna enakkudhaan avamanam.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 21, 2020