ஆந்திராவில் போயும் வேலையை காட்டிய ஷங்கர்… சம்பளத்துல இத்தனை கோடி போச்சே.!

Published on: February 9, 2022
shankar
---Advertisement---

இயக்குனர் ஷங்கர் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிரர். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஜோடியாக கியாரா அத்வானி இணைந்து உள்ளார்.  மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்காக ஷங்கருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷங்கர் என்றாலே ஒரு பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்கே சில கோடிகள் செலவு செய்பவர் ஆவார். எனவே, படத்தின் பட்ஜெட்டை இழுத்துவிட்டு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார் என்கிற பொதுவான குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.

ஆந்திராவில் பசையான தயாரிப்பாளர் கிடைத்தவுடன் அங்கு சென்றும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்துள்ளார். மேலும், ஒரு பாட்டுக்கு 25 கோடி செலவு செய்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன தயாரிப்பாளர் தில் ராஜூ படம் முடிஞ்சி லாபம் வந்தா முழு சம்பளம் ரூ.50 கோடி தரேன். இல்லனா உங்க சம்பளத்துல 20 கோடி குறைச்சு கொடுப்பேன்னு சொல்லி விட்டாராம்..

இதையும் படியுங்களேன்- வடிவேலுவை ஆட வைத்தால் 1 கோடி சம்பளமாம்.! இதுதான் பம்பர் ஆஃபர்.!

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment