தல கூட நடிக்க முடியல…ஏமாற்றம்தான் ஆனாலும்… அஜித் ரசிகர்களிடம் நெகிழ்ந்த பிரசன்னா

Published on: January 21, 2020
---Advertisement---

cde5f909f0bff84681463a67e15af225

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே இந்த படத்தின் வில்லன் யார் என்பதும் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் இந்த படத்தில் யாமி கவுதம் நாயகியாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் தான் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி குறித்து பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் நடிக்க என்னுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான்.  விரைவில் நான் நடிக்கவிருக்கும் செய்தி வெளி வரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தேன்

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் அஜித்துடன் எதிர்காலத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அஜித் ரசிகர்கள் என்மீது காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரசன்னா இந்த படத்தில் நடிப்பது நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அஜித் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment