Cinema History
விஜய்க்கு எதிரான கருத்து.! 100 பேரை திரட்டி சென்ற பாசக்கார தந்தை.!
தளபதி விஜய்க்கு தற்போது இந்திய அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை. கொரோனா முதல் அலை முடிந்த பிறகு விஜயின் திரைப்படம் வந்தால் தான் எங்களுக்கு விமோட்சனம் எனும் தியேட்டர் அதிபர்கள் காத்திருக்கும் அளவுக்கு அவரது படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
அந்தளவுக்கு வளர்ந்து நிற்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல விதமான விமர்சனங்களை எதிர்கொண்டவர். அந்த விமர்சனங்களை எதிர்கொண்டு , தன்னை மென்மேலும் மெருகேற்றி இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார் என்றால் அது மிக பெரிய வளர்ச்சி.
இதையும் படியுங்களேன் –எனக்கும் உதட்டு முத்த காட்சி வேண்டும்.! அண்ணனிடம் அடம்பிடிக்கும் பிரேம் ஜி.!
இவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அப்போது, குமுதம் வார இதழ், இந்த முகத்தை காசு கொடுத்து வேறு பார்க்கவேண்டுமா எனபது போல தங்கள் விமர்சனங்களை எடுத்திவிட்டார்களாம்.
இதனை கண்டு பொறுக்க முடியாத விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தனது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரை அழைத்து பேரணியாக குமுதம் அலுவலகத்திற்கு சென்று இனி இது போல முகத்தை கிண்டல் செய்து எழுத வேண்டாம் என கண்டித்து விட்டு வந்தாராம்.
மேலும், அடுத்தடுத்து விஜயை ஆக்சன் நாயகனாக வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதன் பிறகு பூவே உனக்காக படம் தான் விஜயின் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.