ஆட்டம் கண்ட தர்பார் வசூல் – அடித்து தூக்கிய அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு

Published on: January 21, 2020
---Advertisement---

16fb65b76b6f31e6b521e5efd5b5d892-1

தென்னிந்திய திரைப்படங்களை பொறுத்தவரை வெளிநாட்டில் திரையிடப்பட்டு அதன் வியாபாரத்தை உயர்த்தியது ரஜினி நடித்த படங்கள்தான். அவரின் படங்களை தொடர்ந்தே மற்ற நடிகர்கள் திரைப்படங்கள் அங்கு திரையிட தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பொங்கல் விருந்தாக வெளியான தர்பார் திரைப்படம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுகோ, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் திரையிட்டப்பட்டது. ஆனால், லாஜிக் மீறல்களும், பலவீமான திரைக்கதை மற்றும் வில்லனால் தர்பார் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதோடு, அல்லு அர்ஜூனின் ‘அலா வைகுந்தபுரம்லோ’ மற்றும் மகேஷ் பாபு நடித்த ‘சரிலேரு நீக்கெவரு’ ஆகிய படங்களின் வசூல் தர்பார் படத்தை காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

b2fffa2631e06184865fd2f319ca3401

தர்பார் படத்தின் வசூல் ஏறக்குறைய அங்கு முடிவுக்கு வந்துவிட்டது. வார இறுதி நாட்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் தர்பார் திரையிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தர்பார் திரைப்படம் அமெரிக்காவில் ரூ.11 கோடியும், ஆஸ்திரேலியா, யூ.கே. நியுசிலாந்து ஆகிய நாடுகளில் ரூ.5 கோடியும் வசூலித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

Leave a Comment