அட அவங்களா இது? ஆளே மாறிப்போன நடிகை..!

Published on: February 14, 2022
nashriya_main_cine
---Advertisement---

தனது கொஞ்சும் நடிப்பில் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஷ்ரியா. கம்மியான படங்களில் நடித்தாலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நடித்த ராஜாராணி படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.

nashriya1_cine

இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நேரம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த ஜோடி அஞ்சலி மேனனின் பெங்களூர் டேஸ் படத்தில் ஒருவரையொருவர் அதிகம் அறிந்தனர், அதில் அவர்கள் கணவன் மற்றும் மனைவியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nashriya2_cine

இந்த நிலையில் நஷ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஷ்டாரன்டில் உட்கார்ந்து ஜூஸ் சாப்பிடுவதுமான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். நம்ம நஷ்ரியாவா இது என்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.

Leave a Comment