Connect with us

latest news

மறைந்த நடிகையின் தேசிய விருதை தட்டி பறித்த கமல்ஹாசன்.! ஒரு சின்ன ரீவைண்ட்.!

உலகநாயகன் கமல்ஹாசன் எவ்வளவு பெரிய நடிகர் என்பது நாம் சொல்லி தெரியப்போவதில்லை. இதுவரை அவர் வாங்காத விருது என்றால் அது ஆஸ்கர் மட்டுமே என சொல்லும் அளவிற்கு அவர் நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கிவிட்டார். ஆஸ்கர் விருது அவர் கையில் தவழாலது அந்த விருதுக்கு கிடைக்காத துர்பாக்கியம் என்றே கூறலாம்.

மூன்றாம் பிறை

அவர் ஒரு திரைப்படத்தில் நடித்தால், உடன் நடிப்பது எவ்வளவு பெரிய ஜாம்பவான் நடிகராக இருந்தாலும் அந்த நடிகர் நம் கண்ணுக்கு தெரியமாட்டார். நமது உலகநாயகன் தான் தென்படுவார். அப்படி கமல் தனது நடிப்பின் மூலம் நம்மை அசரடித்துவிடுவார்.

இதையும் படியுங்களேன் –  விஜய் நடித்திருந்தால் நான் சிக்கிருப்பேன்.! பொதுவெளியில் உளறிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!

அப்படிதான், மூன்றாம் பிறையில், படம் முழுக்க மனநல பாதிக்கப்பட்ட பெண்ணாக வாழ்ந்திருப்பார் ஸ்ரீதேவி. ஆனால் அவருடன் கடைசி வரை ஒரு நல்ல மனிதராக கூடவே பயணிப்பார் கமல்ஹாசன். கடைசி காட்சியில் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விடும். ஆனால், ஸ்ரீதேவிக்கு சரியாகி விடும். அந்த கடைசி காட்சியில் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரையும் தன் வசப்படுத்திவிடுவார் கமல்.

இது பற்றி அந்த பட இயக்குனர் மறைந்த ஜாம்பவான் பாலு மகேந்திரா கூறுகையில், அனைவரும் ஸ்ரீதேவிக்கு தான் தேசிய விருது கிடைக்கும் என நினைத்திருந்தனர். ஆனால், கடைசி ஒரு காட்சியின் மூலம் கமல் அதனை தட்டி பறித்துவிட்டார். இறுதியில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமலுக்கு கிடைத்துவிட்டது.

author avatar
Manikandan
Continue Reading

More in latest news

To Top