விஜய் டிவி புகழ் வீஜே இரக்சன் விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஆவார். கலக்க போவது யாரு? சீசன் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இவர் தற்போது குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்திற்காக அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். மா.க.பா.ஆனந்திற்கு அடுத்த படியாக ஷோவை கல கலப்பாக கொண்டு போவதில் திறமைசாலி ரக்சன் அவர்கள்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அந்த படத்தில் இவரின் எதார்த்தமான காமெடிக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வரும் நிலையில் தற்சமயம் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
அந்த வீடியோ இதோ—-> https://www.instagram.com/reel/CZ_lNBSqN9P/?utm_source=ig_web_copy_link
