ஊட்டியில் மகனுடன் தனுஷ்… தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

Published on: February 16, 2022
---Advertisement---

நடிகர் தனுஷ் 20 வயதில் இருக்கும் போதே ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 21 வயதில் அவருக்கு பிறந்த மூத்த மகன்தான் யாத்ரா. அதன்பின் 4 வருடங்கள் கழித்து பிறந்தவர் லிங்கா என தனுஷுக்குக் 2 மகன்கள்.

சமீபத்தில் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். எனவே, மகன்கள் இருவரும் சில நாட்கள் தனுஷுடனும், சில நாட்கள் ஐஸ்வர்யாவுடனும் இருந்து வருகின்றனர். மேலும், தங்கள் பெற்றோர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் எனவும் அவர்கள் ஆசைப்படுவதாக செய்திகள் கசிந்தது.

இந்நிலையில், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் ஊட்டி சென்ற போன போது தனது மூத்த மகன் யாத்ராவை உடன் அழைத்து சென்றார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

danush

Leave a Comment