விழித்துக்கொண்ட வெங்கட் பிரபு.! இளைஞர்கள் குதூகலிக்க மன்மதலீலை தியேட்டரில்…

Published on: February 16, 2022
---Advertisement---

மாநாடு எனும் ஜனரஞ்சகமான மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக மீண்டும் ஒரு ஜனரஞ்சகமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் படி ஒரு படத்தை கொடுப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து இளைஞர்களை கொண்டாட வைக்க மன்மதலீலை படத்தை இயக்கி முடித்துவிட்டார் வெங்கட் பிரபு,

மன்மதலீலை பெயருக்கு ஏற்றார் போல, படத்தின் போஸ்டர், வீடியோ என கிளுகிளுப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு குறுகிய இடைவெளியில், மாநாடு ரிலீஸ் இடைவெளியில் படமாக்கி முடித்துவிட்டார்.

அதனால் தான் இது வெங்கட் பிரபுவின் QUICKY என விளம்பரப்படுத்தப்படுகிறது. இப்படத்தை முதலில் OTT பிளாட்பார்மில் தான் வெளியிட திட்டமிட்டாராம். அப்போது தான் சென்சார் , வீண் பிரச்சனை போன்ற எந்த தொந்தரவும் இருக்காது. கணிசமான லாபமும் கிடைத்துவிடும்  என கணக்கு போட்டார்.

இதையும் படியுங்களேன் – சியான் விக்ரமின் ராசி அந்த மாதிரி.! ஆனால், தயாரிப்பாளரின் நிலை அதோ கதிதான்.!

அதெல்லாம், அந்த கிளசம்பஸ் வீடியோ வெளியாவதற்கு முன்னர் தான். அந்த விடியோவுக்கு இளைஞர்கள் மத்தியில் எழுந்த வரவேற்பு தியேட்டர் விநியோகிஸ்தர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதனால் அவர்கள் தற்போது படத்தை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர்.

அதனால், வெங்கட் பிரபு தனது முடிவை மாற்றி தற்போது படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment