ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா – விக்கி…. ஹீரோயின் அவதாரம் எடுத்த ஜோனிடா…!

Published on: February 18, 2022
nayanthara-vignesh sivan
---Advertisement---

இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என அனைவரும் ஹீரோ அவதாரம் எடுக்கும்போது பாடகிகள் ஹீரோயின் அவதாரம் எடுக்கக் கூடாதா என்ன? அந்த வகையில் தற்போது பிரபல பாடகி ஒருவர் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் ரசிகர்கள் சமீபத்திய கிரஷ் பாடகி. யார் தெரியுமா?

அவர் வேறு யாருமல்ல மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய மனம் மனம் மென்டல் மனமே என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இளம் பாடகி ஜோனிடா காந்தி தான்.

jonita
jonita

பல பாடல்களை பாடியுள்ள ஜோனிடா காந்தி டாக்டர் படத்தில் அனிருத்துடன் இணைந்து பாடிய செல்லம்மா செல்லம்மா பாடல் தான் அவரை பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலையும் ஜோனிடா காந்தி அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானபோது ரசிகர்கள் பலரும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவைவிட ஜோனிடாவை தான் ரசித்தனர். மேலும் பலர் பூஜாவுக்கு பதில் ஜோனிடாவை ஹீரோயினாக போட்டிருக்கலாம் என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறிவிட்டது.

jonita-aniruth
jonita-aniruth

ஆம் இதுவரை பாடகியாக வலம் வந்த ஜோனிடா காந்தி, இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ”walking talking strawberry ice cream” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ண குமார் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

jonita

இப்படத்தை விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக ரசிகர்களின் ஆசை நிறைவேறிவிட்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment