இளம் பெண்ணுடன் ஹோட்டலுக்கு சென்ற தனுஷ்…. விவாகரத்துக்கு பின்னர் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்…!

Published on: February 18, 2022
dhanush
---Advertisement---

கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று திரையுலகில் தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து விட்டார். அதுமட்டும் இன்றி தமிழ் மொழியை தாண்டி பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் கால்பதித்து அசத்தி வருகிறார்.

ஆனால் அவரின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் இவரின் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக இருவரும் இணைந்து அறிவித்தனார். இவர்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்ததை நினைத்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

dhanush with wife

மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த தனுஷின் விவாகரத்து செய்தி தற்போது தான் அடங்கியுள்ளது. தனுஷும் விவாகரத்து சர்ச்சைகளுக்கு பின்னர் நடிப்பில் தீவிரம் காட்டி பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இளம்பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பெண் யார்? தனுஷுடன் இணைந்து அவர் இருக்க காரணம் என்ன என்பது போன்ற பல கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது அந்த பெண் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

dhanush

அதன்படி தனுஷ் தற்போது தெலுங்கில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்கிடையே தனுஷ் ஹோட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். உடன் அவருடன் அவரது காஸ்ட்யூம் டிசைனரும் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறதாம்.

Leave a Comment