வகுப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட பேராசிரியை – சென்னையில் பரபரப்பு

78143856323bd6efc23111741eca1a11

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி ஜி வைஷ்னவா கல்லூரியில் வகுப்பறயில் முன்னாள் பேராசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி. இந்த கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தனலட்சுமி. இவர் ஓய்வு பெற்றாலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தின் முதல் தளத்தில் மர்மமான முறையில் இவர் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த கல்லூரியில் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு தனலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Categories Uncategorized

Leave a Comment