அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள், புரமோ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்து வருகிறது.

Also Read
இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எனவே, அதற்கான புரமோஷன்கள் துவங்கிவிட்டது. இப்படம் தொடர்பான புரமோ வீடியோக்களை போனிகபூர் வெளியிட்டு வருகிறார். சென்னையின் பல தியேட்டர்களில் முதல் 3 நாள் காட்சிகள் ஏற்கனவே முன் பதிவு முடிந்துவிட்டது.

வலிமை திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் இப்படம் முதல் நாளிலேயே ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என தியேட்டர்கள் அதிபர்கள் தெரிவித்து வருகின்றனர்.



