Connect with us

Cinema News

எவளோ பெரிய தயாரிப்பாளரா இருந்தாலும் இதுல சிக்கிருவாங்க.! இதுதான் எங்களோட அசுர பலம்.!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களுக்கு மேலாக வெளியாக்கினாலும் அதில் வெற்றி பெற்ற, லாபம் தந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் நிலைமை இருக்கிறது.

இதில் பல தயாரிப்பாளர்கள் பலர் தாங்கள் கடன் வாங்கியோ, அல்லது  படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என அக்ரிமெண்ட் போட்டோ படத்தை ரிலீஸ் செய்து விடுவர். ஆனால், அந்த படம் தோல்வியடைந்தால், அவர்களிடம் இருந்து தம்பிக்க அடுத்த படத்தை வேறு பெயரில் தனது பினாமி என உறவினர்கள் பெயரில் படத்தை எடுக்க முயற்சிப்பர்.

இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றால் அங்கு இந்த கேஸ் நிற்காது. ஏனென்றால், இவர்கள் பெயரில் உள்ள கடனுக்கு, இவர்களது உறவினர் பெயரில் உள்ள கம்பெனி படத்தை தடுக்க முடியாது.  சட்டத்திற்கு தேவை பேப்பர் டாகுமெண்ட் ஆதாரங்கள்.

இதையும் படியுங்களேன் – கையை கட்டிக்கொண்டு அடங்கி போய் நிற்கும் கமல்.! அவர் முன்னாடி நின்னு தானே ஆகனும்.!

ஆனால், இதனை சரிகட்டவே, விநியோகசித்தர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்துள்ளனர். அதில் சென்று முறையிட்டு, அந்த தயாரிப்பாளருக்கு ரெட் கார்டு கொடுத்து அடுத்த படம் தயாரிக்க முடியாத படி செய்து விடுவார்கள். இதற்கு பயந்தே பல தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்ததும் சினிமாவை விட்டே விலகிவிட்டனர்.

வேறு பெயர், பினாமி என வேறு நிறுவனம் மூலம் படம் தயாரித்தாலும், கோர்ட்டில் தப்பித்தாலும். சங்கத்திடம் மாட்டிக்கொள்வார்கள். தமிழ் திரையுலகினர் இந்த சங்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதால் ஓரளவு அனைவரும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top