
Cinema News
விடாமல் துரத்தும் சார்பட்டா ஹீரோ..! நீங்களா இப்படி..? ஏன் இந்த கொலவெறி …
தமிழ் திரையுலகில் முன்னனி நட்சந்திரங்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார் – தெற்கு மற்றும் பிலிம்பேர் விருதுகள் மற்றும் விஜய் விருதுகளுக்கு தலா இரண்டு பரிந்துரைகளைப் பெற்றார். ஆரம்பகாலத்தில் இவர் அதிகளவு பேசப்படவில்லை என்றாலும் இப்ப உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் போன்ற படங்கள் அதிகளவு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்திருப்பார். அந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவரின் நடிப்பிற்கான திறமையைக் காட்டிய படமாக அமைந்தது.
அதையடுத்து வந்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு கைக்கொடுத்தது. ராஜாராணி, மதராசபட்டினம், பாஸ் எங்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே சிம்மாசனம் போட்டு அமர் வைத்தது.
அண்மையில் வந்த சார்பட்டா பரம்பரையில் குத்து சண்டை வீரராக களமிறங்கியிருப்பார். இப்படத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தார். இதில் இவர் கட்டு மஸ்தான உடம்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
இந்த நிலையில் இன்ஸ்டா ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆர்யா தனது நண்பர் ஒருவருடன் குத்து சண்டை போடும் வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.
வீடியோவை பார்கக: https://www.instagram.com/reel/CaRQs–gavt/?utm_source=ig_web_copy_link