Cinema News
‘காதலுக்கு மரியாதை’ நடிகை லலிதா காலமானார்… திரையுலகினர் இரங்கல்…
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் லலிதா. தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்திருந்தர். மேலும், பரமசிவன், கிரீடம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாகவே இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் அவரின் உடல் நலம் தேறிய நிலையில் கொச்சியில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு இவர் காலமானார். நாடக நடிகையாக தனது நடிப்பு பயணத்தை துவங்கி சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மாறி இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தேவர் மகன் படத்தை இயக்கிய இயக்குனர் பரதனின் மனைவி ஆவார். 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரள அரசின் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
இவரின் மறைவுக்கு தென்னிந்திய திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.