
Cinema News
இப்படியா பாக்கணும் உங்கள..! மார்க்கெட் இல்லாமல் இந்த நிலமைக்கு வந்த கும்கி நடிகை…
கும்கி படத்தின் மூலம் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். முதல் படமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இதையடுயத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது. தொடர் வெற்றியால் தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக உருவெடுத்தார் நடிகை லட்சுமி மேனன். ஜெயம் ரவி, விசால் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். விசாலுடன் காதல் கிசுகிசுக்கப் பட்டார்.
ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், அதன்பிறகு சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘றெக்க’ (2016). அதன்பின் கடந்த ஐந்து வருடங்களாக இவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் கண் ஹாலிவுட்டில் வரும் ஹாரர் படத்தில் டெவில் போன்று பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CaUQgWCpPwE/?utm_source=ig_web_copy_link