மீண்டும் பழைய குப்பையை கிளறிய பாலாஜி முருகதாஸ்… அட்ஜெஸ்மெண்ட் விவகாரத்தால் கொதித்த சனம் ஷெட்டி…!

Published on: February 24, 2022
sanam shetty-balaji murugadoss
---Advertisement---

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொடர்ந்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக கடந்த ஐந்து சீசன் போட்டியாளர்களையும் இணைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ் வாரமும் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த இந்த வாரம் போட்டியாளர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த தேவதை மற்றும் சாத்தான் குறித்து கூற வேண்டும். அதாவது ஏஞ்சல்ஸ் vs டெமன்ஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

sanam shetty

அதில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் தன் வாழ்க்கையை கெடுத்த டெமன் நடிகை சனம் ஷெட்டி என கூறினார். நான்காவது சீசனின்போது தனக்கு எதிராக பொய்யான ஒரே ஒரு குற்றச்சாட்டை கூறி தனது மொத்த பெயரையும் டேமேஜ் செய்து தன் வாழ்க்கையை கெடுத்த டெமன் சனம் தான் என பாலாஜி முருகதாஸ் குறிப்பிட்டார்.

அதன்படி முன்னதாக நான்காவது சீசனின்போது சனம் ஷெட்டி அழகி போட்டியில் வெற்றி பெற சில பல அட்ஜெஸ்ட்மென்ட் செய்தார் என பாலாஜி முருகதாஸ் கூறியதாக அந்த சமயத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. அப்போது பாலாஜிக்கு எதிராக பலரும் கமெண்ட் செய்து வந்ததோடு அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கூறினார்கள்.

sanam shetty

ஆனால் தொலைக்காட்சி தரப்பு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் அந்த பிரச்சனை அப்படியே காணாமல் போனது. தற்போது பாலாஜி மீண்டும் இதை கிளறவே இதுவரை அமைதியாக இருந்த சனம் ஷெட்டி தற்போது கொந்தளித்து டிவிட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் பாலாஜி முருகதாஸ் தற்போது பேசிய வீடியோவும், ஆரி அர்ஜுனன் பாலா அந்த வார்த்தையை பேசியதாக சுரேஷ் சக்கரவர்த்தியிடம் இரவு உரையாடிய சீசன் 4 காட்சிகளையும் பதிவிட்டு, பாலா தான் பொய் சொல்கிறார் என குறிப்பிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment