Connect with us

Cinema News

வினோத்தை கெஞ்சி கேட்டுக்கொண்ட போனி கபூர்.! ஓஹோ இதுதான் விஷயமா.?!

அஜித் முதலில் பத்திரிக்கையாளர்களை தவிர்க்காமல் சந்தித்து வந்தார். பேட்டிகள் அதிகமாக கொடுப்பார். பத்திரிகையாளருடன் இணக்கமான சூழலிலேயே அவர் வைத்துஇருந்தார். அதன் பின்னர் திடீரென அவர் தனது போக்கை மாற்றி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை நிறுத்தி விட்டார்.

valimai

தனக்கு தோன்றிய கருத்துக்களை அஜித் வெளிப்படையாக பேசக்கூடியவர். அது சில நேரம் தவறாக புரிந்து கொள்ள படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிலர் கூறினர். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை சுத்தமாக விட்டுவிட்டார். தற்போது படம் நடிப்பது தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவது என்று மட்டுமே அஜித் இருந்து வருகிறார்.

அவருடன் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வரும் இயக்குனர் வினோத்தும் தற்போது அதே போல் அஜித் வழியை கடைபிடித்து வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் – ஷூட்டிங்கை நிறுத்தி கோபமாக கேரவனுக்குள் சென்ற கமல்.! அதிர்ந்து போய் நின்ற குழு.!

வலிமை படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபடுவதற்கு அஜித் எப்படியும் வரமாட்டார் என தெரிந்துகொண்டு போனிகபூர், இயக்குனர் வினோத்தை அழைத்துள்ளார். ஆனால், அவர் பிடிவாதமாக மறுத்து கொண்டு வந்தாராம்.

அதன் பின்னர், போனி கபூரே  பேசி சம்மதிக்க வைத்து ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பட புரமோஷன் வேலைகளுக்கு வினோத்தை கூட்டி சென்றுள்ளார். அதனால், அங்கு வந்த வினோத் அதிகமாக படத்தை பற்றி பேசாமல் சுருக்கமாக பேசிவிட்டு வந்து விட்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top