Connect with us
vishnu manju

Cinema News

இனி எங்கள் குடும்பத்தை பற்றி மீம் போட்டால் அவ்வளவுதான்… மீம் கிரியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர்…!

திரையுலகில் வலம் வரும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த காமெடியான மீம்கள் இணையத்தில் உலா வருவது வழக்கமான ஒன்றுதான். பெரும்பாலான நடிகர்கள் இந்த மீம்களை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. அதிலும் சில நடிகர்கள் அவர்கள் பற்றிய காமெடி மீம் நன்றாக இருந்தால் அதை ரசிப்பதே அவர்களே ஷேரும் செய்துள்ளார்கள்.

ஆனால் எல்லோரும் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் தற்போது நடந்துள்ள சம்பவம். ஆம் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் இனி மீம் போட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மீம் கிரியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவை போல் தெலுங்கு சினிமா கிடையாது. ஒரு சில குடும்பங்கள் மட்டுமே தெலுங்கு சினிமாவை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கியமான குடும்பம் தான் நடிகர் மோகன் பாபு குடும்பம். இவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

vishnu manju-mohan babu

vishnu manju-mohan babu

அதுமட்டுமல்ல இருவரும் வாடா போடா என அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களாம். இந்நிலையில் நடிகர் மோகன் பாபு குடும்பத்தை சேர்ந்த நடிகர் விஷ்ணு மஞ்சு சமீபத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதோடு, அதில் வெற்றியும் பெற்றார்.

வெற்றி களிப்பில் இருந்த மோகன் பாபு மனம் வருந்தும்படியாக அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சன் ஆஃப் இந்தியா படத்தை சகட்டுமேனிக்கு இணையத்தில் ட்ரோல் செய்தனர். மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளினர். இதனால் கடுப்பான விஷ்ணு மஞ்சு, “ரசிக்கக்கூடிய மீம்ஸ்களை நாங்களும் ஜாலியாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடரப்படும்” என மிகவும் கோபமாக கூறியுள்ளார். ஒரு மீம் போட்டதுக்கு 10 கோடியா என நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top