Connect with us

Cinema News

வினோத் வேண்டாம்..நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்…சினிமாவுல இதலாம் சகஜம்…..

அஜித் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வலிமை. அஜித் ரசிகர்கள் வழக்கம் போல, தங்களது ஆஸ்தான நடிகரை கொண்டாடி தீர்த்துவருகின்றனர். மற்றவர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

உண்மையில், விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு அஜித், அவரது ஆஸ்தான இயக்குனர் நண்பர் விஷ்னுவர்தன் இயக்கத்தில்  தான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கிடையில், தீரன் படத்தை பார்த்து அவரது இயக்கத்தால் கவரப்பட்டு தான் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – ரசிகர்களை பார்த்து மிரண்டு U-டர்ன் அடித்த அஜித்தின் மனைவி.! நாங்க எப்பவும் வேற மாறி.!

வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 3 வருடங்களை முடக்கிவிட்டது. அதனால் தயாரிப்பாளருக்கு ஒரு தேற்றுதல் போல அடுத்த படத்தையும் அவருக்கே கொடுத்து, வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இது முடிந்த பிறகு, மீண்டும் அஜித் – விஷ்னுவர்தன் கூட்டணி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்னுவர்தனும் பாலிவுட் படமான ஷெர்ஷா படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தை அறிவிக்காமல் இருக்கிறார். விரைவில் அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேலை வினோத் கதைக்களம் சரியாக வரவில்லை என்றால் உடனே விஷ்ணுவர்தனை கூப்பிட அஜித் தயாராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top