ரஜினி – பெரியார் சர்ச்சை :  கமல் கட்சியின் டிவிட் கூறுவது என்ன?

Published on: January 22, 2020
---Advertisement---

01f280b816e9672ce504ef76411d7d38

துக்ளக் விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது கடும் சர்ச்சையையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும்  ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். அதேபோல் ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் பற்றி ரஜினியின் நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் எந்த பதிவும் இடவில்லை.      

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் ‘வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை’ எனப்பதிவிட்டு அருகே கமல்ஹாசனின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தி ரஜினிக்கா அல்லது அவரை எதிர்ப்பவருக்கா என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment