குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் வெளியான படங்கள்

Published on: February 28, 2022
---Advertisement---

வயலினில் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், இவர் தமிழப்படங்களில் இசை அமைத்துள்ளார் என்றால் அப்படியா என்று தான் கேட்பார்கள். அவ்வளவு ஆச்சரியம் இருக்கும்.

இவர் இசை அமைத்தப் படங்களோ அனைத்துமே சூப்பர்ஹிட் என்றால் இன்னும் அந்த ஆச்சரியம் மேலோங்கும். சரி…இப்போது வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் சூப்பர்ஹிட் சினிமாப்படங்களை பார்ப்போம்.

வா ராஜா வா

va raja va

1969ல் வெளியான படம் வா ராஜா வா. பிரபாகரன், சுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் யார் தெரியுமா? குன்னக்குடி வைத்தியநாதன். இவர் இசை அமைத்த முதல் தமிழ்ப்படம் இதுதான். அருமையான தத்துவப்பாடல் உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல என்ற பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. ஏ.பி.நாகராஜன் இயக்கியுள்ளார்.

தோடி ராகம்

இந்தப்படத்தை குன்னக்குடி தயாரித்துள்ளார். இவரது அருமையான இசையில் படம் செம சூப்பராக உள்ளது. இனிய வயலினின் நாதத்தை நாம் காதாற கேட்டு ரசிக்கலாம். இந்தப்படம் 1983ல் வெளியானது. டி.என்.சேஷகோபாலன் நடித்துள்ளார்.

திருமலை தென்குமரி

1970ல் வெளியான படம். ஏ.பி.நாகராஜன் இயக்கியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதனின் இசை விருந்தை இந்தப்படத்தில் கேட்டு ரசிக்கலாம். பிரபல பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தான் இந்தப்படத்தின் கதாநாயகன். மனோரமா, சிவகுமார், சுருளிராஜன், வீரசாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

அழகே தமிழே நீ, குருவாயூரப்பா, கழியாத காவியம், மதுரை அரசாளும், சிந்தனையில் மேடைக்கட்டி, திரல்மணி கதிர்கள், திருப்பதி மலைவாழும் உள்பட பல பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தின் பெரும்பாலான பாடல்களை சீர்காழி கோவிந்தரராஜனே பாடியுள்ளார்.

தெய்வம்

1972ல் வெளியான படம் தெய்வம். எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கிருபானந்த வாரியார், ஜெமினிகணேசன், சௌகார் ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மருதமலை மாமணியே, நாடறியும் மலை நான் அறிவேன் சுவாமிமலை, திருச்செந்தூரில் போர் புரிந்து, திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், வருவான்டி தருவான்டி மலையாண்டி என்ற முத்து முத்தான பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. இதில் வருவான்டி தருவான்டி மலையாண்டி என்ற பாடலை சூலமங்கலம் சகோதரிகள் பாடி அசத்தியுள்ளனர்.

கந்தர் அலங்காரம்

1979ல் வெளியான படம் கந்தர் அலங்காரம். கே.சுந்தரம் இயக்கியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம். தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, சுஜாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தனம் மணக்குது, கற்பூரம் ஜொலிக்குது, குன்றக்குடி குமரைய்யா குறைகளைத் தீரய்யா, என்ற சூப்பர்ஹிட் பாடல் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment