20 நிமிடத்தில் 4 குவார்ட்டர் : பந்தயத்தில் வெற்றி பெற்ற நபருக்கு நேர்ந்த சோகம்

Published on: January 22, 2020
---Advertisement---

e0be13478b9a675f08d042f311e28008

உத்தரபிரதேசம் பாரீலீ பகுதியில் இசாத் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திர சிங். இவர் சமீபத்தில் தனது 8 நண்பர்களுடன் மது அருந்த சென்றார். அப்போது 4 குவார்ட்டர் பாட்டிலை தண்ணீர் கலக்காமல் 20 நிமிடத்திற்குள் குடிக்க வேண்டும் என அவரின் நண்பர் பிரதீப் என்பவர் பந்தயம் கட்டியுள்ளார். தோற்றுப்போனவர் மீதமுள்ள 8 பேரின் மதுபாட்டில் வாங்கி தர வேண்டும் என பந்தயம் கட்டப்பட்டது.

இதனையடுத்து ராஜேந்திர சிங் 4 குவார்ட்டர் பாட்டிலை 20 நிமிடத்தில் குடுத்து முடித்தார். அப்போது அவரின் மகன் தர்மேந்திராவும் அங்கே இருந்தார். அதன்பின் வீட்டிற்கு வந்த ராஜேந்திர சிங் படுத்து உறங்கியுள்ளார். அப்போது திடீரென அவர் ரத்த வாந்தி எடுத்தார். எனவே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரின் மகன் முயற்சி எடுத்தார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக தெரிகிறது.

இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ள ராஜேந்திர் சிங்கின் மகன் தர்மேந்திரா ‘எனது தந்தை எப்படி இறந்தா என தெரியவில்லை. அவரின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவர் குடித்த 4 மதுபாட்டில்களை எங்கோ இருந்து வரவழைத்தனர். போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளர்.

ராஜேந்திர சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின் போலீசார் நடவடிக்கை எடுக்கப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையில் சந்தேகத்தின் பேரில் பிரதீப்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment