நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் போட்டால் பயந்துடுவேன்னு நெனச்சியா ? இளம்பெண்ணின் துணிச்சலான செயல்

Published on: January 23, 2020
---Advertisement---

b7cf4d1388bf07105ec11c704878bb3a

விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதால் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே செல்போன் கடை வைத்திருப்பவர் கலையரசன். இவர் தனது கடையில் வேலைப் பார்த்த பெண் ஒருவரைக் காதலித்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் கடையை மூடிய கலையரசன் காதலியோடு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது தனது காதலியின் நிர்வாணப் படங்களை தனக்கு அனுப்ப சொல்லி நச்சரித்துள்ளார். ஆரம்பத்தில் அனுப்பிய அந்த பெண் பின்னர் புகைப்படம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அதனால் அந்த பெண் கலையரசனைப் பிரிய முடிவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை போலி முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த பெண் போலீஸாரிடம் புகாரளிக்க கலையரசனைக் கைது செய்த போலிஸார் இப்போது கடலூர் சிறையில் அடைத்தனர்.

Leave a Comment