Connect with us

Cinema News

முதலில் சிம்பு, அடுத்து தனுஷ், தற்போது சிக்கியுள்ள நபர் சியான் விக்ரம்.! பகீர் கிளப்பும் பின்னணி தகவல்.!

ஒரு சென்சேஷனல் இயக்குனர் , முன்னணி நடிகர் இணைந்து ஒரு படம் வரப்போகிறது என்றால் அதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு வந்துவிடும்.  ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றால் அந்த படம் அதள பாதாளத்திற்கு சென்றுவிடும்.

அப்படிதான், சிம்பு –  ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான AAA  திரைப்படம் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் – தனுஷ் கூட்டணியில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் எதிர்பார்ப்பை அதிகமூட்டின. ஆனால், அந்த இரு படங்களும் படு தோல்வியை தழுவின.

இதையும் படியுங்களேன் – உன்னால என் காசு எல்லாம் போச்சுடா.! புகழ் மீது கடும் கோபத்தில் சூரி.! 

அந்த இரு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இரு படங்களும் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டவை, எதோ சில காரணங்களால் ஷூட்டிங் முடியாமல், நீண்டு கொண்டே போய் கடைசியில் எதோ இருப்பதை கொண்டுவந்து எடிட் செய்து ஒட்டி படத்தை ரிலீஸ் செய்து பெரிய பல்பு வாங்கியது .

தற்போது அதே நிலைமை விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் ரெடியாகி வரும் துருவ நட்சத்திரம் படத்திற்கும் வந்துவிடுமோ என ரசிகர்கள் பயப்படுகிறார்கள். ஆம், தற்போது இருப்பது வரை போதும், அதனை எடிட் செய்து இரண்டாம் பாகத்திற்கு ஒரு லீடு போல காட்டி படத்தை முடித்துவிடலாம் என முடிவு செய்துவிட்டானராம்.

படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விக்ரம் தொடங்கி கிட்டத்தட்ட முடிக்க சென்றுவிட்டாராம். விரைவில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி வெளியானலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top