
Cinema News
நான் நடிக்கமாட்டேன்!..விஜய வேணா நடிக்க சொல்லுங்க!… இயக்குனரிடம் கடுப்பான நடிகர் அஜித்…..
Published on
By
கோலிவுட்டை பொறுத்தவரை விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. பொது இடங்களில் இருவரும் சிரித்து கொண்டு போஸ் கொடுத்தாலும் அவர்கள் எப்போதும் ஒரு போட்டி உண்டு. பல வருடங்களாகியும் இது குறையவே இல்லை.
விஜயின் படத்தை தன்னுடைய படம் அதிகம் வசூலிக்க வேண்டும் என அஜித்தும், அஜித் படத்தை விட தன்னுடைய படம் அதிக வசூலை பெற வேண்டும் என விஜயும் நினைப்பதுண்டு.. இடையில் அல்லாடுவது பாவம் அவர்களின் ரசிகர்கள்தான்.
இந்நிலையில், அஜித் பற்றிய ஒரு விஷயத்தை இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு யுடியுப் பேட்டியில் பகிர்ந்துள்ளார். இவர் நடிகை தேவயாணியின் கணவர். மேலும், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும்,திருமதி தமிழ் ஆகிய படங்களை இயக்கியவர். பார்த்திபனும், அஜித்தும் நடித்த நீ வருவாய் என திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்டது.
இதையும் படிங்க: அட்லிக்கு அல்வா கொடுத்த ஷாருக்கான்… கடுப்பில் பதிவுபோட்ட அட்லி…
இதுபற்றி பேசிய ராஜகுமாரன் ‘இந்த படத்தை அஜித், விஜய் என இருவரையும் வைத்துதான் முதலில் இயக்க நினைத்தேன். ஆனால், வெறும் 15 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன் என விஜய் கூறினார். எனவே, அவருக்கு பதில் பார்த்திபனை நடிக்க வைத்தேன்.
இந்த கதையை அஜித்துடம் கூறிய போது பார்த்திபன் செய்த கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னேன். ஆனால், அவர் முடியாது என மறுத்தார். ஹீரோவின் காதலை கதாநாயகி கடைசி வரை ஏற்கவே இல்லை. எனவே, அதில் எந்த ஹீரோயிஷமும் இல்லை.
அதுபோன்ற வேடத்தில் மௌனராகம் படத்தில் நடித்துதான் நடிகர் மோகனின் மார்க்கெட் போனது. வேண்டுமானால், இந்த வேடத்தில் விஜயை நடிக்க சொல்லுங்கள்’ என அவரிடம் அஜித் கூறியதாக ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். நீ வருவாய் என படத்தில் கதாநாயகியாக தேவயாணி நடித்தது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...