Connect with us

Cinema News

2 நாள் ஆயிடிச்சு, நம்ம சேட்டைய ஆரம்பிச்சிடுவோம்.! ரஜினி பட இயக்குனர் செய்த வேலை தெரியுமா.?!

நடிகர் மனோபாலாவை தற்போதைய தலைமுறைக்கு காமெடி நடிகராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஓர் போட்டியாளராகவும் தான் தெரியும். அவரே கூறினால் தான் அவர் ஒரு இயக்குனர் என்பது அவ்வப்போது தெரியவரும்.

ஆம், அவர் 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அதுவும், ரஜினிகாந்த், விஜயகாந்த் என அப்போதைய முன்னனி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும்  சுமார் 950 படங்களுக்கு மேல் நடித்தும் உள்ளார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது. எனக்கு சந்தோசமாக இருந்தது. முதல் நாள் ஷூட்டிங் சென்று விட்டேன். ஊர்காவலன் படம் பெயர். ராதிகா ஹீரோயின்.

இதையும் படியுங்களேன் – என்ன சமந்தா ரௌடிங்க கூடதான் ஜோடி போடுவீங்க போல.! உதட்டை பத்திரமாக பாத்துக்கோங்க.!

நானும் ராதிகாவும் நன்றாக பேசுவோம். ஆனால் அது ரஜினி படம் அவர் வரும்போது யாரும் தேவையில்லாமல் பேச கூடாது என சொல்லி பயமுறுத்தி விட்டார்கள். சரி என நானும் ராதிகாவும் இரண்டு நாள் அமைதி காத்தோம்.

அதன் பிறகு இரண்டு நாள் முடிந்தது. உடனே ராதிகா, சார் ரெண்டு நாள் ஆயிடுச்சி. இனி நீங்க தான் டைரக்டர் தைரியமா நாம பேசலாம் என கூறினார். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் பேசியே பழக்கப்பட்ட என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. என வெளிப்படையாக தனது அனுபவங்களை இயக்குனர் மனோபாலா தெரிவித்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top