Connect with us

latest news

இவனுகள நம்பலாமா வேண்டாமா.?! குழப்பத்தில் தந்தையும் மகனும்.!

சியான் விக்ரம் வெகு நாட்களாக ஒரு நல்ல படம்  கொடுக்க எண்ணி அண்மையில் கொடுத்த திரைப்படம் தான் மகான். இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்திருந்தால் சியான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்திருப்பர். அந்தளவுக்கு சியானின் தோற்றம், நடிப்பு ஸ்டைல் என பின்னி பெடலெடுத்துப்பார்.

கதையாகவும் நல்ல படமாக இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். மகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல தெரிந்தாலும் தேறியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு, விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் அடுத்தடுத்த படங்களை தொடங்காமல் இருக்கின்றனர்.

5

Mahaan

முதலில் விக்ரம் அவரது நடிப்பில், கோப்ரா, பொன்னியின் செல்வன் பட வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்த படம் பா ரஞ்சித் உடன் என அறிவித்து மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது வரை ஷூட்டிங் எப்போது என விக்ரமுக்கு தகவல் வரவில்லையாம். விக்ரம் கேட்டால், செட் வேலைகள் நடக்கிறது என கூறிக்கொண்டே இருக்கின்றனராம். மார்ச், ஏப்ரல் என கூறி, தற்போது மே மாதம் ஷூட்டிங் போகலாம் என கூறுகிறார்களாம்.

இதையும் படியுங்களேன் – 400 காளைகளுடன் களமிறங்க தயரான சூர்யா.! இந்த மாதம் ஷூட்டிங்கா.?! இதென்ன புதுசா இருக்கு.!

1

அடுத்து துருவ் விக்ரம், இவர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக கபடி எல்லாம் கற்றுக்கொண்டு இருந்தார். ஆம், கபடி வீரரை பற்றிய படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருந்தார். ஆனால், இடையில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் என பெரிய கூட்டணி அமைய அப்படியே அங்கே போய்விட்டார். அது முடித்து ரிலீஸ் ஆன பிறகு தான் துருவ் படத்திற்கு மாரி செல்வராஜ் வர முடியும்

தந்தையும் மகனும் இந்த இரு இயக்குனர்களை நம்பி தற்போது இருக்கின்றனராம். இருவரும் திறமையான இயக்குனர்கள் என்பதால், அடுத்த பட கதை கேட்கலாமா வேண்டாமா என யோசித்து வருகிறார்களாம்.

author avatar
Manikandan
Continue Reading

More in latest news

To Top