இந்த வசனத்த நான் பேசவே மாட்டேன்.! அடம்பிடித்த வடிவேலு.!

Published on: March 16, 2022
---Advertisement---

வடிவேலு நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அவர் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவரது காமெடிகளுக்காகவே ஓடிய பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அப்படி இருக்கையில் அவரை இரட்டை வேட ஹீரோவாக மாற்றி படம் நெடுக சிரிக்க வைத்தால் எப்படி இருக்கும்.

அப்படிதான் இருந்தது, இம்சை அரசன் படத்தில். படம் முழுக்க வடிவேலுவின்சிரிப்பு சாம்ராஜ்யம் தான். சிம்பு தேவன் இப்படத்தை இயக்கி இருந்தார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்து இருந்தார். இதில் பல வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

அதில் இறுதி காட்சிக்கு முன்னர்,நடிகர் வி.எஸ்.ராகவனிடம் வடிவேலு, நாங்கள் இருவரும் சேருவோம் என உங்களுக்கு எப்படி தெரியும். என கேட்டிருப்பார். உடனே வி.எஸ்.ராகவன், இரட்டை குழந்தைகள் பிறந்தால் திரைக்கதையில் என்னதான் செய்ய முடியும் என பேசியிருப்பார். இந்த வசனம் இது ஒரு திரைப்படம் என்பதை ரசிகர்களுக்கு திடீரெனெ நினைவூட்டும். அது சமயோஜித தன்மையும் கூட வெளிப்படையாக கூறிவிட்டால் மக்கள் அதனையும் ஏற்றுக்கொள்வார்கள்.

இதையும் படியுங்களேன் – சசிகுமாரின் பரிதாப நிலை.! குருநாதர் உதவியுடன் தன் பழைய தொழிலுக்கே சென்ற சோகம்.!

ஆனால் இதனை பேச வடிவேலுக்கு இஷ்டமில்லையாம், முடியவே முடியாது என அடம்பிடித்தாராம். சரி நடித்து விடுங்கள் எடிட்டில் இந்த காட்சியை தூக்கி விடுகிறோம் என கூறிவிட்டனராம். பிறகு, தயாரிப்பாளர் ஷங்கர்  இந்த படத்தை பிரிவியூ ஷோ பார்த்துள்ளார். அந்த குறிப்பிட்ட வசனத்திற்கு விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதனை பார்த்த படக்குழு, இந்த காட்சியை நாங்கள் நீக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டனராம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment