மனைவியின் செல்போனை நோண்டிய கணவன் ! ஷாக் ஆகி எடுத்த முடிவு !

Published on: January 23, 2020
---Advertisement---

3fe690214621644d4457e4988f8d4cea

ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவியின் செல்போனை நோண்டி அதில் அவர் பல ஆண்களுடன் பழகியதைக் கண்டு அவரைக் கொலை செய்துள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் அஜஸ் முகமது கான் மற்றும் நைனா மங்காளி. இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு நைனா தொடர்ந்து பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எப்போதும் ஆர்வமாக இருந்துள்ளதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் முகமது கான் நைனாவின் மொபைல் போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் அவர் தனது பேஸ்புக் ஆண் நண்பர்களுடன் சாட் செய்திருப்பது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து நைனாவிடம் கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட நைனா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் முகமது கான். ஆனாலும் நைனாவின் சமூக வலைதளங்கள் மீதான ஆர்வம் குறைந்த பாடில்லை. இதனால் கோபமான அவர் நைனாவை டெல்லி ஜெய்ப்பூர் ஹைவேஸ் சாலைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கல் ஒன்றை அவரது மனைவி முகத்தில் தூக்கிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நைனாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி முகமதுவை கைது செய்தனர்.

Leave a Comment