இந்த விஷயத்திற்கு எந்த நடிகனும் ஒத்துக்கமாட்டாங்க.! சூர்யாவுக்கு உண்மையில் பெரிய மனசு சார்.!

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். வழக்கமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களை பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாக்கி வெற்றிகண்ட…

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தியேட்டரில் நல்ல வசூல் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

வழக்கமாக குடும்ப செண்டிமெண்ட் படங்களை பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாக்கி வெற்றிகண்ட பாண்டிராஜ் முதன் முறையாக சமூக கருத்துள்ள திரைப்படத்தை ஆக்சன் கலந்து உருவாக்கி வெற்றிகண்டுள்ளார் என்றே கூறலாம்.

இந்த படம் பற்றி இயக்குனர் பாண்டிராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘இந்த கதையை எந்த ஹீரோவும் அப்படியே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கதையில், அதிலும் குறிப்பாக அந்த காட்சியை மாற்ற சொல்லியிருப்பர். ஆனால், சூர்யா அந்த மாதிரி எதுவும் சொல்ல வில்லை.

 

நாயகனின் மனைவி குளியல் விடியோவை வில்லன் குரூப் எடுத்து வைத்து, ஹீரோவை மிரட்டும். ஆனால் மற்ற ஹீரோக்கள் யாராக இருந்தாலும், அதனை மாற்றி வேறு விதமாக எடுக்க சொல்லியிருப்பர். ஆனால் சூர்யா அப்படி சொல்லவில்லை. அதுதான் கதைக்கு தேவை அதனால், அது அப்படியே இருக்கட்டும் என கூறிவிட்டார் சூர்யா .’ என தனது கதாநாயகனை புகழ்ந்து பேசியிருந்தார்.

suriya

இதையும் படியுங்களேன் –என்னது சதுரங்க வேட்டைக்கு முன்னாடியே அஜித் கிட்ட H.வினோத் கதை சொல்லிட்டாரா.?! இது புதுசா இருக்கே.!?

உண்மையில் அதுதான் நிஜம். ஏனென்றால், இதுவரை வந்த பெரும்பாலான கமர்சியல் படங்களில் அதிகபட்சம் ஹீரோவின் தங்கைக்கு ஏதேனும் கொடுமை நடக்கும். ஆனால், ஹீரோயினுக்கு எந்த கொடுமையும் வில்லனால் நடந்ததாக தெரியவில்லை. அப்படி இருந்தாலும், அந்த படம் ஹிட்டாகவும் செய்யாது. ஆனால், அதனை சூர்யா இந்த படத்தில் உடைத்திருப்பார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *