உங்கள தோழியாக தான் பாக்குறேன்.! தனுஷ் போட்ட ஒரு ட்வீட்.! அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.!

Published on: March 17, 2022
---Advertisement---

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் நல்ல தம்பதியினராக இருந்து வந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். 18 வருட மனவாழ்க்கையில் இருந்து தாங்கள் தனித்தனியாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து உள்ளோம் என தெரிவித்தனர்.

இது அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அறிவித்து கொண்ட பின்னர் தனுஷ் தனது பட வேலைகளில் பிசியாக இயங்க தொடங்கினார். அதேபோல ஐஸ்வர்யாவும் மீண்டும் தனது இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் புதிதாக பயணி எனும் பாடல் விடியோவை இயக்கியுள்ளார். சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து அவர் இயக்கிய முதல் வீடியோ இதுவாகும்.

இந்த வீடியோவை இந்தியாவில் உள்ள பிரபல நடிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மியூசிக்கல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – வரலாற்றை திருப்பி பாருங்க… கமல் கூட ஒரு இயக்குனர் ஒரு தடவ தான் பயணிக்க முடியும்.! ஏன் தெரியுமா.?!

அந்த வீடியோவுக்கு கீழே எனது தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இத்தனை வருடம் கணவன் மனைவியாக இருந்து தற்போது ‘எனது தோழி ஐஸ்வர்யா’ என பதிவிட்டு உள்ளது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

இருந்தாலும் இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்து கொள்வதில்லை ,பேசி கொள்வதில்லை என்று இல்லாமல் நண்பர்கள் போல இருப்பது மீண்டும் இவர்கள் இணைவார்கள் என்ற நம்பிக்கையை இவர்கள் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் தந்துள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment