நம்மை எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவர் சொந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஆராய்ந்தால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்தவகையில் தியாகு என்றழைக்கப்படும் நடிகரும் ஒருவர். இவரது இயற்பெயர் தியாகராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர்.
இவர் பிரபல வயலின் வித்வான் ராசமாணிக்கம் பிள்ளையின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்படங்களில் இவரது நகைச்சுவை தனியாகத் தெரியும். இவரது முகத்தைப் பார்த்தால் திருட்டு முழி கலந்த வில்லத்தனமாக இருக்கும். சில படங்களில் துணை வில்லனாகவும் நடித்து இருப்பார். இவர் நடித்த சில படங்களைப் பார்ப்போம்.
ஒரு தலை ராகம்
1980ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் இப்ராகிம். சங்கர், ரூபா, சந்திரசேகர், தியாகு இவர்களுடன் டி.ராஜேந்தர் நடித்து இருந்தார். கதை, இசை மற்றும் நடிப்பு என முப்பரிமாணங்களைக் காட்டியுள்ளார் டி.ராஜேந்தர். அதனால்தான் என்னவோ படத்தின் தலைப்பைப் பாருங்கள்.
9 எழுத்துக்கள் இல்லாமல் இருக்கும். ஏனென்றால் இவர் தான் படத்தை இயக்கவில்லையே. இந்தப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். என் கதை, இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும், கூடையிலே கருவாடு, மன்மதன், நான் ஒரு ராசியில்லா ராஜா, வாசமில்லா மலரிது ஆகிய பாடல்கள் உள்ளளன. ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்த இந்தப் படத்தில் தியாகு நடித்து அசத்தியிருப்பார்.
மைடியர் மார்த்தாண்டன்

1990ல் வெளியான இப்படத்தை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரபு, குஷ்பூ, கவுணடமணி, கோவை சரளா, தியாகு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
ஓ அழகு நிலவு, ஆடுது பார், இளவட்டம் கை தட்டும், கல்யாண மாப்பிள்ளைக்கு, மை டியர் மார்த்தாண்டன், ஓ மகராஜா, பாக்கு வெத்தல, சத்தம் வராமல், உட்டாலங்கடி ஆகிய பாடல்கள் உள்ளன.
ஜல்லிக்கட்டு
1987ல் வெளியான இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், சத்யராஜ், ராதா, எம்.என்.நம்பியார், ஜனகராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி இவர்களுடன் தியாகுவும் நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மணிவண்ணன் இயக்கிய இந்தப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஹே ராஜா, காதல் கிளியே, கத்தி சண்டை போடாமலே, ஏரியில் ஒரு ஓடம், எத்தனையோ ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ராசய்யா

1995ல் வெளியான இந்தப்படத்தை பி.கண்ணன் இயக்கியுள்ளார். பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோருடன் தியாகுவும் நடித்துள்ளார்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். திண்டுக்கல்லு, காதல் வானிலே, கருவாட்டு, மஸ்தானா, மஸ்தானா, பாட்டு எல்லாம், உன்ன நெனச்சு ஆகிய பாடல்கள் உள்ளன.
வண்ணத்தமிழ்ப்பாட்டு

2000ல் வெளியான இந்தப்படத்தை பி.வாசு இயக்கியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் அருமை. பிரபு, வைஜெயந்தி, ஆனந்த்ராஜ், ராதாரவி, வடிவேலு, மணிசந்தனா மற்றும் தியாகு உள்பட பலர் நடித்துள்ளனர்.
என்ன சொல்லி பாடுவேன், காட்டுக்குயில் போல, நிலவில் நீ, வண்ண கதவுகள், வெளிச்சம் அடிக்குதடி, விளையாட்டு விளையாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.
