விஜயை அசத்திய இளம் இயக்குனர்… தளபதி 65 இயக்குவது இவரா?

Published on: January 23, 2020
---Advertisement---

be4fd9beb53f95b142c6ed5d61e0aebe

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரின் அடுத்த  படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் திரையுலகில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதேபோல், இயக்குனர் பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன், மோகன்ராஜா, அருண்ராஜா காமராஜ், பேரரசு உள்ளிட்ட சில இயக்குனர்கள் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாக தெரிகிறது. அதோடு, கோமாளி இயக்குனர் பிரதீப் பெயரும் அடிபட்டது.

54529bfa76d5208693839251bc04f52b

இந்நிலையில், ஜெயம் ரவியை வைத்து அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் சமீபத்தில் விஜயை சந்தித்து ஒரு கதையை கூறினாராம். அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதால் தளபதி 65 திரைப்படத்தை அவரே இயக்குவார் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், விஜய் இன்னும் யாரையும் உறுதி செய்யவில்லை. அதன் பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Comment