நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?…விஜய் சம்பளத்தை கேட்கும் அஜித்!….

Published on: March 21, 2022
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே விஜய்க்கும், அஜித்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. தங்களுடைய படங்கள் அதிக வசூலை பெற வேண்டும் என இருவருமே நினைப்பார்கள். விஜய் படம் தொடர்பான ஒரு அறிவிப்பு வெளியாகி பரபரப்பானால், உடனே அஜித் படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகும்.

அதேநேரம், என்னதான் அஜித் – விஜய் இருவருடையே போட்டி என்றாலும் சம்பளத்தை பொறுத்தவரை ரூ.100 கோடி பெற்று முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான். அஜித் ரூ.65 கோடி சம்பளம் பெற்று வந்தார்.

மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடி சம்பளம் பெற்ற விஜய், பீஸ்ட் படத்துக்கு ரு.100 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்து நடிக்கவுள்ள தமிழ் – தெலுங்கு படத்தில் ரூ.115 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

vijay

இந்நிலையில், வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கும் அஜித் பழைய சம்பளமே பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்திற்கு பின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு அஜித் ரூ.100 கோடி சம்பளம் பேசியுள்ளதாகவும், அதற்கு லைகா நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது அஜித்துக்கு 62வது திரைப்படமாகும்.

எப்படியே சம்பளத்தில் விஜயை அஜித் தொட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment