சைடு கேப்பில் விஜயை கலாய்த்தாரா தேசிய விருது இயக்குனர்???…. உங்களுக்கு லொள்ளு அதிகம் சார்…..!

Published on: March 21, 2022
parthiban-vijay
---Advertisement---

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதன் அடையாளமாக முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சாங்கான அரபிக்குத்து பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

இன்னும் அரபிக்குத்து பாடலின் ஃபீவர் அடங்காத நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி ஜாலியோ ஜிம்கானா என்ற அந்த பாடலை விஜயே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

barthiban

இந்நிலையில் இதை விமர்சிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் டிவீட் ஒன்றை போட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியான அதே நாளில் தான் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.

barthiban

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து டிவீட் போட்டுள்ள பார்த்திபன் கூறியிருப்பதாவது, “நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட பர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது – முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள். இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே” என கூறியிருந்தார்.

beast

இதில் அவர் கூறியுள்ள “முழுவதும் organic” என்பது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கிடைத்த பார்வைகள் போலியானவை என்பதை மறைமுகமாக குறிக்கும் விதத்தில் தான் பார்த்திபன் இவ்வாறு டிவீட் போட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment