அட செமயா இருக்கே! ரஜினி 168 தலைப்பு இதுதானா? – கசிந்த செய்தி

Published on: January 23, 2020
---Advertisement---

ca57a38f41f2afce6a104c215c667c57

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அவருடன் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்தே’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள கசிந்துள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து #அண்ணாத்தே என்கிற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உண்மையான தலைப்பு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment