கமல் படத்தின் அட்ட காப்பிதான் இந்த படமா.?! மாட்டிக்கொண்ட செல்வராகவன் – தனுஷ்.!

Published on: March 23, 2022
---Advertisement---

தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் இரண்டாவது திரைப்படமாக வெளியாகி இருந்த படம்தான் காதல் கொண்டேன். அப்படத்தின் மூலம் தான் இயக்குனர் செல்வராகவன்- தனுஷ் வெளியில் மிக பிரபலமாக அறியப்பட்டனர். தனுஷ் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் ஒரு பெண்ணை பைத்தியக்காரத்தனமாக காதலித்து, அந்த பெண்ணை தன்னுடன் வைத்துக்கொள்ள அவன் என்னெவெல்லாம் செய்கிறான் என்பதை அப்படியே காட்டி இருப்பார் இயக்குனர் செல்வராகவன்.

கிட்டத்தட்ட இதே கதைக்களத்தோடு ஏற்கனவே தமிழில் ஓர் படம் வெளியாகி இருந்தது. அதில் கமல் தான் நாயகன் மற்றும் தயாரிப்பாளர். இந்த படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார். ஆம் அந்த படம் தான் குணா.

இதையும் படியுங்களேன் – என்னது விஜய்க்கு இப்போதான் தைரியம் வந்திருக்கா.?! பழைய ரெக்கார்ட் எடுத்து பாருங்க…

அதிலும் இதே போன்ற கதை தான் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆண், தான் காதலித்த ஒரு  பெண்ணை தன்னுடன் வைத்துக்கொள்ள அந்த பெண்ணை கடத்தி சென்று இறுதியில் கமல் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கும். காதல் கொண்டேன் படத்திலும் கிட்டத்தட்ட இதே கதை தான்.

ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் தனது காதலை எப்படி வெளிப்படுத்துகிறான். அந்த பெண்ணை தன்னுடன் வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறான் எனபதை தான் இருவரும் வெவ்வேறு கோணங்களில் சொல்லியிருப்பர் என்பதே நிதர்சனமான உண்மை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment